Oct 6, 2026
Thisaigal NewsYouTube

கமலுடன் இணைந்து நடிக்கிறேனா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கமலுடன் இணைந்து நடிக்கிறேனா?

தமிழ் சினிமா ரசிகர்களால் எக்காலத்திலும் கொண்டாடப்பட்ட கூட்டணி ரஜினி - கமல். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட 10 திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து படங்கள் நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்குப் பின் பிரிந்து நடிக்க முடிவு செய்தனர். அதன்படி 46 ஆண்டுகளாக பிரிந்து நடித்து வரும் ரஜினி - கமல் தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர்.

ராஜ் கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி - கமல் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்தது. இதனை சைமா விருது விழாவில் கமல் உறுதிச் செய்தார். ஆனால், இயக்குநர் யார் என்று அவர் கூறவில்லை.

இந்நிலையில், ரஜினியிடம் இப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரஜினி, "அடுத்து ராஜ்கமல் & ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. நானும், கமலும் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசை. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →