Apr 19, 2026
Thisaigal NewsYouTube
அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா.. ஜூலையில் வெளியாகும் காந்தாரி - படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
சினிமா

அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா.. ஜூலையில் வெளியாகும் காந்தாரி - படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

Share:

இந்தியா, ஜூன் 01-

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று டாப் நடிகைகளின் பட்டியலில் உள்ள நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் காந்தாரி.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி மும்பையில் பிறந்தார். சின்னத்திரை நாடகங்களிலும், வெள்ளித்திரை படங்களிலும் சிறு வயது முதலே நடித்துவரும் ஹன்சிகா மோத்வானி கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்து கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினார்.

நாயகியாக அவர் நடித்த முதல் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான FilmFare வழங்கும் விருதை அவர் வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்கின்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்திருந்தார். தளபதி விஜய், கார்த்திக், விஷால் மற்றும் ஆர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் சொஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் ஹன்சிகா நடிப்பில், இறுதியாக தமிழில் பார்ட்னர் என்கின்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது தமிழில் ரவுடி பேபி மற்றும் மேன் போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தாரி என்கின்ற திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் அவர் நடிக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகிவுள்ள நிலையில் இந்த படம் உருவான விதம் குறித்த வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.

Related News

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து