Apr 19, 2026
Thisaigal NewsYouTube
என்னது சிவாங்கிக்கு கல்யாணமா?
சினிமா

என்னது சிவாங்கிக்கு கல்யாணமா?

Share:

இந்தியா, மார்ச் 30-

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர், சிவாங்கி. இவரது தந்தையும் தாயும் பாடகர்கள் என்பதால் இவருக்கும் சங்கீத கலை, தானாக வந்து விட்டது. ஆரம்பத்தில் இவர் நடப்பதையும் பேசுவதையும் கலாய்த்தவர்கள், இப்போது இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். சிவாங்கி தற்போது ஆல்பங்கள் பாடுவது, படங்களில் பின்னணி பாடகியாக இருப்பது என பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில்தான், இவரது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மகிழ்ச்சிப்படுத்தும் போட்டியாளராகவும், திறமையான பாடகியாகவும் இருந்தவர், சிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவருக்கு பெரிய புகழை தேடித்தர, தொடர்ந்து இவருக்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து, சிவாங்கிக்கு இன்னொரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 2019ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி சமைக்கவே தெரியாத கோமாளியாக கலந்து கொண்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிவாங்கியை இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவரை கலாய்த்தவர்களுக்கு கூட, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவரை பிடிக்க ஆரம்பித்தது.

சிவாங்கி, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அவரது திருமணம் குறித்த வதந்தியை கிளப்பிவிட்டுள்ளது.

அந்த பதிவில் சிவாங்கி “நான் சமூக வலைதளங்களை ஓபன் செய்தாலே திருமண செய்திகள், நிச்சயதார்த்த செய்திகள், கர்பமாக இருக்கும் செய்திகள்தான் குவிகின்றன. நான் இப்போது கட்டத்தில்தான் இருக்கிறேனா?” என்று கேட்டிருக்கிறார். இதனால், இவரும் ஒரு வேலை திருமண செய்தி கூறுவாரோ என பலர் பேசி வருகின்றனர்.

Related News

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து