Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லோகேஷின் கைதி 2 படக் கதாநாயகி யார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோகேஷின் கைதி 2 படக் கதாநாயகி யார்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனை முடித்துவிட்டு கைதி 2 படத்தை அவர் இயக்கவிருக்கிறார். கூலி படம் வெளியான பிறகுதான் கைதி அடுத்த பாகத்தின் பணிகளை லோகேஷ் தொடங்குகிறார்.

இந்நிலையில் கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகை அனுஷ்கா செட்டி தான் கைதி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் வருவது போல அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →