Oct 7, 2026
Thisaigal NewsYouTube

33 வருட சினிமா வாழ்க்கையில் ஷாருக் கானின் முதல் தேசிய விருது 

திசைகள் செய்திப்பிரிவு
Share:
33 வருட சினிமா வாழ்க்கையில் ஷாருக் கானின் முதல் தேசிய விருது 

கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான திரைப்பட ஜவான். இப்படத்தில் ஷாருக் கான் இரு வேடங்களில் நடித்திருப்பார். இவருடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வேளையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் ஜவான் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இதுவே அவர் வாங்கும் முதல் தேசிய விருதாகும்.
தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார் ஷாருக் கான். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே அவருக்கு தேசிய விருதைக் கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →