Jul 18, 2026
Thisaigal NewsYouTube
எல்.சி.யு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் படங்களை உறுதிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்!
சினிமா

எல்.சி.யு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் படங்களை உறுதிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்!

Share:

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எல்.சி.யு ஒருபோதும் முடிவுக்கு வராது என்றும், கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தனது அடுத்தடுத்த முக்கியப் பங்களிப்புகளாக இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் திரைப்படப் பணிகளை முடித்த பிறகு, எல்.சி.யு திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது தயாரிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படமும் எல்.சி.யு கதைக் களத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News