Oct 23, 2026
Thisaigal NewsYouTube

பாலாவை போல நீங்களும் உதவி செய்வீங்களா? குக் வித் கோமாளி புகழ் சொன்ன ‘நச்’ பதில்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலாவை போல நீங்களும் உதவி செய்வீங்களா? குக் வித் கோமாளி புகழ் சொன்ன ‘நச்’ பதில்

இந்தியா, ஏப்ரல் 13-

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், தான் செய்து வரும் உதவிகள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர்கள் தான் புகழ் மற்றும் பாலா. இவர்கள் இருவரின் காமெடி கலாட்டாவால் அந்நிகழ்ச்சியும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. விரைவில் அதன் ஆறாவது சீசனும் ஆரம்பமாக உள்ளது. இந்த நான்கு சீசன்களில் பாலா மூன்று சீசன்களில் மட்டுமே கலந்துகொண்டார். அதன்பின்னர் வேறு சில வாய்ப்புகள் வந்ததால் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

ஆனால் புகழ், முதல் சீசனில் இருந்து தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார். தமிழில் சசிகுமாரின் அயோத்தி, சந்தானத்துடன் ஏஜண்ட் கண்ணாயிரம் போன்ற படங்களில் நடித்த புகழ், தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ஜூ கீப்பர் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படி சினிமாவில் பிசியாகி வரும் புகழ் சமீபத்தில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரிடம் பாலா மாதிரி உதவி செய்வீர்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த புகழ், என்னால் முடிந்த அளவு உதவிகளை நான் செய்வேன். நான் 10 ரூபா சம்பாதித்தால் அதில் இருந்து 1 ரூபாய் பிறருக்கு கொடுத்தால் குறைந்துவிடமாட்டேன். நான் 10 சம்பாதித்துவிட்டு அந்த 10 ரூபாயும் இன்னொருத்தருக்கு கொடுக்க சொன்னால் என்னால் முடியாது.

நான் தற்போது தினசரி 50 ஏழைகளுக்கு உணவளித்து வருகிறேன். விஜயகாந்த் மறைவுக்கு சென்றபோது இதை நான் சொன்னேன். தற்போது 100 நாட்களாக அதை செய்து வருகிறேன். போகப்போக அந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன். நான் செய்வது வெளியில் தெரியாததால் இந்த கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் நானும் என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறேன் என புகழ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →