விஜய் மகன், விஜய் சேதுபதியின் மகன், ஷங்கரின் மகள், விக்ரமின் மகன் ஆகிய திரையுலக நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைந்து விட்டனர்.
அண்மையில் தயாரிப்பாளர் லலித் மகன் எல்.கே. அக்ஷய் குமார் சிறை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் மகனும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை தனுஷின் Wunderbar நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் தனது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை தானே இயக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








