Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ரஜினி-கமல் இணையும் படத்தின் வில்லன் யார்?
சினிமா

ரஜினி-கமல் இணையும் படத்தின் வில்லன் யார்?

Share:

தமிழ் சினிமா என்று எடுத்தாலே முதலில் நம் நினைவில் நியாபகம் வருவது ரஜினி-கமல், அதன்பின் மற்ற கலைஞர்கள் வருவார்கள்.

ரசிகர்கள் பெரிதும் கொண்டாடும் இந்த இரண்டு ஜாம்பவான்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து படம் நடிக்கவிருக்கின்றனர்.

இவர்கள் இணைந்து படம் நடிப்பார்களா என எண்ணப்பட்ட நிலையில் பட அறிவிப்பு வர அதே வேகத்தில் படத்தின் முதல் புரொமோ வீடியோவும் வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பநிதி தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரஜினி-கமல் இருவருமே செம கெத்தான லுக்கில் வர நெல்சன் மற்றும் அனிருத் அந்த புரொமோ வீடியோவில் இடம் பெறுகிறார்கள். யார் ஹீரோ என்ற பெரிய கேள்வியுடன் வீடியோ முடிகிறது.

47 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணையும் இப்படத்தில் வில்லன் யார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ரஜினி ஹீரோவாக நடிக்க கமல் வில்லனாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் புதிய தகவலாக இந்த படத்தில் வில்லனாக மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி குறித்து உறுதியான தகவல் ஒன்றும் வரவில்லை. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்