Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி யார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி யார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து மதராஸி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மதராஸி திரைப்படம் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாக தகவல்கள் வந்தன. இப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

டைம் டிராவல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப் பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் எனகெ கூறப்படுகிறது.

இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகி என கூறப்பட்டு வந்த நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →