Oct 7, 2026
Thisaigal NewsYouTube

அனிருத்துக்கு எப்போது திருமணம்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அனிருத்துக்கு எப்போது திருமணம்?

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. அண்மையில் கூலி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட, ஆசியாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் அனிருத் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இது மிகவும் வைரலானது.

நேற்று கூலி திரைப்படம் வெளியான நிலையில், இப்படத்தை திரையரங்கில் காண, அனிருத்தின் தந்தைச் சென்றிருந்தார். படம் பார்த்து விட்டுச் செல்லும் போது அவரிடம் அனிருத்தின் திருமணம் எப்போது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அனிருத்தின் தந்தை, "நான் உங்கள கேட்கலாம்னு நினைக்கிறன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. என்ன கூப்பிடுங்கள்" எனக் கலகலப்பாக பதில் கூறியுள்ளாராம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →