Oct 13, 2026
Thisaigal NewsYouTube

கைதி 2 பற்றி வந்த அண்மைய தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைதி 2 பற்றி வந்த அண்மைய தகவல்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி-லோகேஷ் இருவரின் திரைப் பயணத்தில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட படமாகவும், பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகவும் கைதி இருந்தது.

எந்த ஒரு கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல் கதையையும் திரைக்கதையையும் நம்பி லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வெற்றி கண்டார். தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து என்ன படம் இயக்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்கெனவே இருந்த நிலையில் புதிய தகவல் வந்துள்ளது.

அதாவது மீண்டும் தனது சூப்பர் வெற்றிப் படமான கைதி 2 படத்தை இயக்க உள்ளாராம். கார்த்தி, லோகேஷுடன் எடுத்த போட்டோவுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →