Oct 12, 2026
Thisaigal NewsYouTube

அஜித் படத்தில் கேமியோ ரோலில் எஸ்.ஜே. சூர்யா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஜித் படத்தில் கேமியோ ரோலில் எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனிடையே, இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா கேமியோ ரோலில் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையெனத் தெரியவில்லை. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே அஜித் படத்தில் ஒரே ஒரு காட்சியில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். அஜித் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த ஆசை திரைப்படம்தான் அது.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அப்போது ஒரே ஒரு காட்சியில் அவர் ஆட்டோ டிரைவாக நடித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →