Oct 2, 2026
Thisaigal NewsYouTube

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ம் பாகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ம் பாகம்

கடந்த 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இதில் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சி குமார் என்ற ரோலில் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டார். இப்படத்தில் அவர் பேசும் வசனங்கள், Body Language என ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்தது.

விஜய் சேதுபதி பல மேடைகளில் இந்த படத்தில் குமுதா ஹேப்பி அண்ணாச்சி வசனத்தைக் கூறி மக்களின் கைத்தட்டலைப் பெற்று வருகிறார். கோகுல் இப்படத்தை முழுக்க முழுக்க காமெடி பாணியில் கலகலப்பான படமாக இயக்கியிருந்தார்.

தற்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இரண்டாம் பாகத்தினை இயக்குவதற்கு கோகுல் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதில் முக்கியமாக விஜய் சேதுபதி இல்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் அவருக்கு பதிலாக சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டான்ஸ் மாஸ்டரான சாண்டி தற்போது நடிகராக கலக்கி வருகிறார். 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →