Oct 7, 2026
Thisaigal NewsYouTube

ஜனநாயகன் படத்தில் நடிக்கும் 3 வெற்றி இயக்குனர்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜனநாயகன் படத்தில் நடிக்கும் 3 வெற்றி இயக்குனர்கள்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அதாவது 3 இயக்குனர்களும் பத்திரிகையாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்க்கு மிகவும் நெருக்கமான இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →