Mar 10, 2026
Thisaigal NewsYouTube
டீகோட் செய்யப்பட்ட மாவீரன் ட்ரைலர்..படத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா ? அடேங்கப்பா..!
சினிமா

டீகோட் செய்யப்பட்ட மாவீரன் ட்ரைலர்..படத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா ? அடேங்கப்பா..!

Share:

சிவகார்த்திகேயன் தற்போது தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். முன்பு போல் காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடிக்காமல் வித்யாசமான ஜானரில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் எஸ்கெ21 படத்தில் நடிக்கின்றார்

இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகின்றார். ஒரு ராணுவ வீரரான வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கி வருகின்றது. இதைப்போல சிவகார்த்திகேயன் வித்யாசமான ஜானரில் நடித்த திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது மாவீரன். அந்த வகையில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீசாகி இருக்கின்றது. ஏற்கனவே மாவீரன் திரைப்படம் பாண்டஸி ஜானரில் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் அதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இந்த ட்ரைலரை பார்க்கும்போதே இப்படம் பாண்டஸி கலந்த காமெடி படமாக இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மாவீரன் படத்தின் ஹேல்டைட்டே இப்படத்தில் இருக்கும் எமோஷனல் காட்சிகள் தானாம். படத்தில் சிவகார்த்திகேயன் எமோஷனல் காட்சிகளை சிறப்பாக ஸ்கோர் செய்து இருக்கிறாராம்.

இதைத்தொடர்ந்து படத்தில் மற்றுமொரு ஹைலைட்டாக இருக்கும் விஷயம் படத்தின் சண்டை காட்சிகளாம். சண்டைக்கு பயப்படும் சிவகார்த்திகேயன் ஒரு சக்தியின் மூலம் வீரம் பெற்று சண்டை செய்வாராம். அந்த சண்டை ஜாக்கி சானின் சாயலில் இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.

Related News

தாய் கிழவி: 63 வயது நடிகை ராதிகாவின் அசத்தல் நடிப்பு - உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை

தாய் கிழவி: 63 வயது நடிகை ராதிகாவின் அசத்தல் நடிப்பு - உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை

திரையுலகில் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்: 'மேட் இன் கொரியா' முதல் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வரை

திரையுலகில் ஜொலிக்கும் பிரியங்கா மோகன்: 'மேட் இன் கொரியா' முதல் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வரை

பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரி: தந்தையின் சாயலா அல்லது தாயின் நகலா? ரசிகர்கள் மத்தியில் விவாதம்

பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரி: தந்தையின் சாயலா அல்லது தாயின் நகலா? ரசிகர்கள் மத்தியில் விவாதம்

வெறும் ஊக்கிகளா அல்லது துணைக் கதாபாத்திரங்களா? இந்தித் திரையுலகில் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?

வெறும் ஊக்கிகளா அல்லது துணைக் கதாபாத்திரங்களா? இந்தித் திரையுலகில் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' மலையாளப் படத்தின் மறுபதிப்பா? - வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' மலையாளப் படத்தின் மறுபதிப்பா? - வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி

மகளிர் தினம் 2026: தமிழ் சினிமாவில் பெண் மையத் திரைப்படங்களின் அதிரடி எழுச்சி

மகளிர் தினம் 2026: தமிழ் சினிமாவில் பெண் மையத் திரைப்படங்களின் அதிரடி எழுச்சி