Oct 6, 2026
Thisaigal NewsYouTube

பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா

தளபதி விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஹெச். வினோத், இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனக் கூறியிருந்தார். இதன் பின் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விட்டது.

வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் புத்ராஜெயாவில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இப்படியொரு இசை வெளியீட்டு விழாவைப் பார்த்திருக்கவே முடியாது என்ற அளவுக்கு, மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →