Oct 5, 2026
Thisaigal NewsYouTube

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த இளம் நடிகை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த இளம் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இளம் நடிகை ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் இளம் நடிகை மிர்னா மேனன் என்பவர் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆனந்தம் என்ற வெப்சீரியலில் நடித்து உள்ளார் என்பது ஒரு சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் ‘ஜெயிலர்’ படத்தில் இன்னும் சில நடிகர்கள் இணைய இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு மே மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →