க்றிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவான 'தி ஒடிசி' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், இப்படம் அனைத்துக் காலத்திற்கும் பொருத்தமானது என்றும், ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் பாராட்டித் தள்ளியுள்ளார்.
உலக சினிமா வரலாற்றில் மாபெரும் கலைப்படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் பிரம்மாண்டமான திரைக்கதை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி உலகளாவிய சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
தமிழ் திரையுலகின் உலக நாயகனான கமல்ஹாசன், இப்படத்தின் சிறப்புகளைப் புகழ்ந்துள்ளதோடு, இது போன்ற சினிமா படைப்புகள் காலங்களைக் கடந்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் என்று தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.








