Jun 4, 2026
Thisaigal NewsYouTube
பிக் பாஸ் 8 பிரம்மாண்ட அப்டேட்.. இவர்களே இந்த சீசனின் போட்டியார்கள்
சினிமா

பிக் பாஸ் 8 பிரம்மாண்ட அப்டேட்.. இவர்களே இந்த சீசனின் போட்டியார்கள்

Share:

Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 எப்போது துவங்கப்போகிறது, மேலும் போட்டியாளர்கள் யார் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:
ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் (Bigg Boss). தமிழில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி கொண்ட நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7 விருவிருப்பாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இதில், பல பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் இதில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். அதே போல் பிரதீப் ஆண்டனிக்கு (Pradeep Antony) பிக் பாஸ் 7 இல் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

இவர்கள்தான் பிக்பாஸ் சீசன் 8 சீசனின் போட்டியாளர்களா?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி (Bigg Boss Tamil Season 8) பல பிரபலமான நட்சத்திரங்களுடன் கூடிய விரைவில் தொடங்கவுள்ளது. பலர், இதற்கான ஆடிஷனிற்கும் வந்துள்ளனர். அதில் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரியாஸ்கான், பூனம் பாஜ்வா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாடகி சுதித்ரா முன்னாள் கணவர் கார்த்திக், பப்லு ப்ருத்விராஜ், பாடகி சுவேதா மேனன், பாடகி கல்பனா, அமலா ஷாஜி, சோனியா அகர்வால், நடிகை கிரண், ரோபோ ஷங்கர் என பல பிரபலங்களின் பெயர்கள் வலம் வருகின்றன.

தொகுப்பாளர் யார்?
இதனிடையே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை உலகநாயகன் கமல் ஹாசன் (Ulaganayagan Kamal Haasan) தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவர் வாங்கும் சம்பளமும் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்..?
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி (Cooku With Comali Season 5) முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு எங்கே?
பிக்பாஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெறுவது வழக்கம். இதுவரை அனைத்து சீசன்களும் அங்குதான் நடைப்பெற்றன. இனி ஆரம்பமாக உள்ள 8 ஆவது சீசனும் அங்குதான் நடைபெறும் என கூறப்படுகிறது.

Related News

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு