Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்குக் கதாநாயகியைத் தேர்வு செய்துள்ளாராம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜேசன் சஞ்சய்  தனது முதல் படத்திற்குக் கதாநாயகியைத் தேர்வு செய்துள்ளாராம்

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிகராகக் களமிறங்கி வெற்றி நடை போட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் இப்போது சினிமாவில் விலகி அரசியல் களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார்.

ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் எடுக்க உள்ளார். தனது படத்தின் நாயகனை தேர்வு செய்ய நேரம் எடுத்த சஞ்சய் பட அறிவிப்பு வந்த பல மாதங்களுக்குப் பிறகு தான் நாயகன் யார் என்ற தகவல் வந்தது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் நாயகன் சுந்தீப் கிஷன் தான். தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். 2021ம் ஆண்டு ஜதி ரத்னாலு படத்தில் நாயகியாக நடிக்க தொடங்கிய பரியா அப்துல்லா தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறாராம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →