Oct 9, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்துக்குத் தொடர்பு?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்துக்குத் தொடர்பு?

ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் விநியோகம் செய்ததாக அரசியல்வாதி ஒருவர் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →