Oct 6, 2026
Thisaigal NewsYouTube

வடசென்னை 2 எப்போது?.. தனுஷ் பதில்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வடசென்னை 2 எப்போது?.. தனுஷ் பதில்

தனுஷ் தயாரித்து நடித்து வெற்றிமாறன் இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வடசென்னை.

இன்று வரை தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளை எங்கும் பார்த்தாலும், ரசிகர்களும் சரி, பத்திரிகையாளர்களும் சரி வடசென்னை 2 எப்போது என்று தான் கேட்பார்கள்.

அந்த அளவிற்கு மக்கள் மனதை வென்ற வடசென்னை படம் குறித்து தனுஷ் 'இட்லி கடை'' படத்தின் பிரீ ரிலீஸ் விழாவில் பகிர்ந்துள்ளார்.

அதில், " வட சென்னை 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும், படம் 2027 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார். இத்தகவல் மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →