Oct 13, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் பிரபாஸுக்கு வில்லனாகும் தமிழ் ஹீரோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நடிகர் பிரபாஸுக்கு வில்லனாகும் தமிழ் ஹீரோ

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ஏடி, சலார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதைத் தொடர்ந்து அடுத்து பிரபாஸ் கைவசம் தற்போது பல படங்கள் வைத்து இருக்கிறார். அவரது 25 ஆவது படத்தை அனிமல் பட புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு ஸ்பிரிட் என பெயரிட்டு இருக்கின்றனர்.

அது மட்டுமின்றி ராஜாசாப், சலார் 2 ஆகிய படங்களும் வரிசையில் உள்ளன. இந்நிலையில் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கப் போகிறாராம். இதற்கு முன் அவர் கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →