Sep 15, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளிக்கு வரும் சூர்யா 47
சினிமா

தீபாவளிக்கு வரும் சூர்யா 47

Share:

நடிகர் சூர்யா மற்றும் 'ஆவேசம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் 'சூர்யா 47' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சூர்யா வித்தியாசமான காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், இது அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் நஸ்லென் மற்றும் நஸ்ரியா நாசிம் ஃபஹத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்புப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், தயாரிப்பு தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News