Oct 14, 2026
Thisaigal NewsYouTube

பிரம்மாண்டமாக உருவாகும் ‘கைதி 2’ படம்.. LCU-வில் என்ட்ரி கொடுக்கும் முன்னணி ஹீரோ!

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில், மார்வல் - டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கைதி’ படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார்.

இந்த யூனிவெர்சில் கடைசியாக ‘லியோ’ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக ‘கைதி 2’ படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். ‘கூலி’ படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்.

இந்த நிலையில், ‘கைதி 2’ படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆக கமல்ஹாசன் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கமல்ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார்.

தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன் மூலம், ‘கைதி 2’ டில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப் போவது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →