விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வசிகா நடிப்பில் உருவான 'நூறு சாமி' திரைப்படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தாய் ஒருவரின் தியாகத்தையும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமாகும்.
நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன் மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.








