Oct 13, 2026
Thisaigal NewsYouTube

ஹீரோவாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகன்…

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹீரோவாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகன்…

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கிலும் நுழைந்துள்ளார்.

ஷங்கர் வீட்டில் இருந்து சினிமாவிற்கு ஹீரோயின் கிடைத்த நிலையில் தற்போது ஹீரோவும் வரவுள்ளார். அவரது மகன் அர்ஜித் ஷங்கர் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விரைவில் இவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். அதுவும் பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிதியைத் தொடர்ந்து அர்ஜித் ஷங்கருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →