Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சிம்புவின் அரசன் படம் குறித்த தகவல்
சினிமா

சிம்புவின் அரசன் படம் குறித்த தகவல்

Share:

சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் இதுவாகும். வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் குறித்து ஓர் அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதில், படத்தின் பூஜை வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு 9-ம் தேதி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.    

Related News

சிம்புவின் அரசன் படம் குறித்த தகவல் | Thisaigal News