Oct 11, 2026
Thisaigal NewsYouTube

விஜய்யை அடுத்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய்யை அடுத்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக ஹெச். வினோத் - விஜய் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் இதுவே விஜய்யின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் ஜனநாயகன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஹெச். வினோத் ரஜினியுடன் இணைந்து பணி புரியப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ரஜினியைச் சந்தித்து கதையும் கூறியுள்ளாராம் ஹெச். வினோத். அந்த கதை ரஜினிக்கும், அவரது மகள் சௌந்தர்யாவிற்கு பிடித்து விட்டதாம். ஆகையால் ஜெயிலர் 2 படத்திற்குப் பின், கண்டிப்பாக ரஜினியின் படத்தை ஹெச். வினோத் இயக்க அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர்.

அதே போல் வீர தீர சூரன் பட இயக்குநர் அருண் குமாரும் ரஜினிக்குக் கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →