Jun 3, 2026
Thisaigal NewsYouTube
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் நான்காவது நடிகை
சினிமா

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் நான்காவது நடிகை

Share:

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர்.

மேலும், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், படக்குழுவிடமிருந்து அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 8 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வரும் பாலிவுட் நடிகை ஒருவர் அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுஷ்கா ஷர்மாதான். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கடந்த 2018ல் வெளிவந்த Zero படத்தில் கடைசியாக கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், அதன்பின் அவர் எந்த படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக திருமணத்திற்கு பின் அவர் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார்.

ஆனால், தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் இவர் அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

இரண்டாம் நாளில் 56% வசூல் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸில் அர்ஜுன் சர்ஜாவின் 'பிளாஸ்ட்' திரைப்படம் அதிரடி சாதனை

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

"பிளாஸ்ட்" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனை - அர்ஜுன் சர்ஜாவின் அதிரடி ஆட்டத்திற்குத் தமிழகத்தில் பலத்த வரவேற்பு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு

தீபாவளி வெளியீடாக சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': அதிகாரப்பூர்வ தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு