Jul 4, 2026
Thisaigal NewsYouTube
‘மாரீசன்' படக் குழுவைப் பாராட்டியுள்ளாராம் இயக்குநர் ஷங்கர்
சினிமா

‘மாரீசன்' படக் குழுவைப் பாராட்டியுள்ளாராம் இயக்குநர் ஷங்கர்

Share:

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒரு மறதி நோயாளிக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக் குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளது. அவர் உடைந்த அந்த தருணம். அவர் உண்மையில் ஓர் அற்புதமான நடிகர் என்பதைக் காட்டி விட்டார். ஃபகத் ஃபாஸில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அருமையான படத்தை கொடுத்த இயக்குநர் சுதீஷ் சங்கர் மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுகள் என ஷங்கர் கூறியுள்ளாராம்.

Related News

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

எரின் லெகவுண்ட்டின் புதிய சின்த்-பாப் பாடல் 'தி சினிமா' வெளியீடு!

எரின் லெகவுண்ட்டின் புதிய சின்த்-பாப் பாடல் 'தி சினிமா' வெளியீடு!