Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ரூ.50 கோடிக்கு காசி தளம் போன்ற அரங்கமைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரூ.50 கோடிக்கு காசி தளம் போன்ற அரங்கமைப்பு

இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவர் என்பது நாம் அறிந்ததே. பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அவரது பிரம்மாண்ட படங்கள் மிகப் பெரிய வசூலைக் குவித்து சாதனையும் படைத்தன. அவர் அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் SSMB29 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

இந்தப் படத்திற்காக ராஜமௌளி தற்போது வாரணாசி - காசி கோவில் போன்ற அரங்கமைப்பை உருவாக்கி இருக்கிறார். வாரணாசியில் படப்பிடிப்பு செய்வது கடினம் என்பதால் அந்த கோவிலின் செட்டை அப்படியே ஹைதராபாத்தில் உருவாக்கி இருக்கின்றனர்.

இதற்காக 50 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறாராம் ராஜமௌலி. இந்த செட்டின் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →