Sep 2, 2026
Thisaigal NewsYouTube
'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்
சினிமா

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

Share:

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ், முதன்முறையாக மலையாளத் திரைப்பட உலகில் தடம் பதிக்கிறது. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் 'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' என்ற திரைப்படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

19-ஆம் நூற்றாண்டின் கேரள நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கலாச்சாரப் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. கேரளாவின் புகழ்பெற்ற 'ஒடியன்' எனப்படும் உருமாறும் மர்ம மனிதனின் பின்னணியில், ஒரு சக்திவாய்ந்த தாய்வழி குடும்பத்திற்குள் ஏற்படும் உண்மைக்கும் மாயைக்கும் இடையிலான போராக இந்தத் த்ரில்லர் கதை அமைகிறது. பூதகாலம், பிரம்மயுகம் போன்ற மிரட்டலான படங்களை இயக்கிய ராகுல் சதாசிவன் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். கரண் ஜோஹர், ஆதர் பூனவல்லா, அபூர்வா மேத்தா மற்றும் சுப்ரியா மேனன் ஆகியோர் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியத் திரைப்படமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related News