Oct 1, 2026
Thisaigal NewsYouTube

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி

விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொங்கல் சிறப்பாக இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கல் ரேஸில் இருக்கும் நிலையில் அந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதாம்.

அண்மைய தகவல் என்னவென்றால் பராசக்தி படத்தை ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுக்கூட்டம் ஒன்றில் விஜய் திமுக-வை அதிகம் விமர்சித்து பேசி இருந்த நிலையில், இன்று பராசக்தி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.  

இருப்பினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →