Oct 23, 2026
Thisaigal NewsYouTube

விஜய்க்கு தம்பியாக நடிக்கும் பிரபல ஹீரோ..தீயாக வெளியான தளபதி 68 அப்டேட்..!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விஜய்க்கு தம்பியாக நடிக்கும் பிரபல ஹீரோ..தீயாக வெளியான தளபதி 68 அப்டேட்..!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதையடுத்து விஜய் தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். விரைவில் சென்னை திரும்பும் விஜய் லியோ படத்தின் டப்பிங் வேலைகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கின்றார். இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.

ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியான நிலையில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படம் அடுத்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என்றும் தகவல்கள் வருகின்றன.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் தற்போது தளபதி 68 பற்றிய ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது தளபதி 68 படத்தில் பிரபல ஹீரோவான ஜெய் மிகமுக்கியமான ரோலில் நடிக்கிறாராம். இப்படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிப்பதாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே இவர் விஜய்யின் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தான் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →