Jun 17, 2026
Thisaigal NewsYouTube
அல்லு அர்ஜுன் மார்க்கெட்டை உடைக்கும் சங்கர் பட ஹீரோ.. கைவசம் இருக்கும் இரண்டு மெகா பட்ஜெட் படங்கள்
சினிமா

அல்லு அர்ஜுன் மார்க்கெட்டை உடைக்கும் சங்கர் பட ஹீரோ.. கைவசம் இருக்கும் இரண்டு மெகா பட்ஜெட் படங்கள்

Share:

இந்தியா, மார்ச் 28 -

இங்கே எப்படி விஜய் வசூல் மன்னனாகவும் ஆட்டநாயகனாக ஜொலித்து வருகிறாரோ, அதே மாதிரி அக்கட தேசத்தில் அல்லு அர்ஜுன் படங்கள் தான் நம்பர் 1 ஆக வலம் வருகிறது. அதிலும் இவருடைய நடிப்பை புஷ்பா படத்தில் பார்த்ததிலிருந்து எல்லா பக்கமும் இவருக்கு ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள்.

அந்த அளவிற்கு ஆல்ரவுண்ட் ஹீரோவாக கலக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அந்த வகையில் இப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெற்றி பெற்று விடும்.

இப்படி ஒவ்வொரு படத்திலும் ஜொலித்து வருவதால் இவருடைய சம்பளம் தற்போது 85 கோடிக்கு உயர்ந்து விட்டது. இதனால் மற்ற ஹீரோக்கள் இவருடைய மார்க்கெட்டை எப்படியாவது தகர்த்து எறிய வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள்.

அதனால் இவர் மட்டும்தான் எனக்கு போட்டி என்று ராம்சரண், அல்லு அர்ஜுனாவை ஓவர் டேக் பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சங்கர் படத்தில் முதன் முதலாக இணைந்து உருவாகிய கேம் சேஞ்சர் படம் மிகப்பிரமாண்டமாக ரெடியாகிக் கொண்டு வருகிறது.

இந்தப் படத்தை எப்படியாவது வெற்றியாக கொடுக்க வேண்டும் என்று ராம்சரண் கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது புஷ்பா தான். அதனால் இப்படத்தை இயக்கிய சுகுமாரை எப்படியாவது தன் வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று கட்டம் கட்டி விட்டார்.

அந்த வகையில் ராம்சரண், கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் உடன் கூட்டணி வைக்கப் போகிறார். எப்படியாவது அல்லு அர்ஜுனாவின் மார்க்கெட்டை உடைத்தாக வேண்டும் என்ற முயற்சியில் கைவசம் இரண்டு பெரிய படங்களை வைத்துக் கொண்டு ராம்சரண் சுற்றி வருகிறார்.

இதற்கிடையில் அல்லு அர்ஜுனாவின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதே மாதிரி ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படம் இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

அப்படி இந்த இரண்டு படங்களும் வெளிவந்தால் யாருக்கு வெற்றி கிடைக்கிறது என்பது இந்த ஒரு படத்தின் மூலமே தெரிந்து விடும். இதற்கிடையில் அல்லு அர்ஜுன், ஜவான் படத்தை மாபெரும் வெற்றியாக கொடுத்து 1100கோடி வசூலை அள்ளிய இயக்குனர் அட்லியுடன் கூட்டணி வைக்கப் போகிறார்.

எப்படி பார்த்தாலும் வெற்றி அல்லு அர்ஜுனா பக்கம் தான் இருப்பது போல் தெரிகிறது. பார்க்கலாம் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று.

Related News

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு தலைவராக நடிகர் டோனி லியுங் பொறுப்பேற்பு