Jul 21, 2026
Thisaigal NewsYouTube
AK 64 படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் உச்ச நட்சத்திரங்கள்
சினிமா

AK 64 படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் உச்ச நட்சத்திரங்கள்

Share:

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம்தான் AK 64. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன. படக்குழுவினர் ஏற்கனவே அங்கு சென்று ஏற்பாடுகளைச் செய்து விட்டதாகவும், படப்பிடிப்பு தொடங்கி விட்டது எனக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்தான்.

அவரைத் தொடர்ந்து மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மிஸ்கின், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்