Jun 13, 2026
Thisaigal NewsYouTube
குக் மட்டுமில்ல கோமாளிகளும் புதுசுதான், 5வது சீசனில் அதிரடியாக களமிறங்கும் புது கோமாளிகள் யார்?
சினிமா

குக் மட்டுமில்ல கோமாளிகளும் புதுசுதான், 5வது சீசனில் அதிரடியாக களமிறங்கும் புது கோமாளிகள் யார்?

Share:

இந்தியா, ஏப்ரல் 23-

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் குக் மட்டுமின்றி புதுசு புதுசாக கோமாளிகளையும் களமிறக்கி உள்ளது விஜய் டிவி, அவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பாப்புலர் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி தொடங்க உள்ளது. முந்தைய சீசன்களைப் போல் அல்லாமல் இம்முறை பல்வேறு புதுமைகளுடன் அமர்களமாக ஆரம்பமாக உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஆனால் இம்முறை வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜை களமிறக்கி உள்ளனர். கேட்டரிங் துறையில் கிங் ஆக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், சினிமாவிலும் மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல் இம்முறைய சமையல் திறமையை வெளிப்படுத்த களமிறங்கும் குக்குகள் குறித்த விவரமும் கசிந்துள்ளது. அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, சீரியல் நடிகர் வசந்த், நடிகை ஷாலின் சோயா மற்றும் சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்ஸி உள்ளிட்ட எட்டு போட்டியாளர்களை களமிறக்கி உள்ளதாக

இந்நிலையில். இந்த சீசனில் புது குக்குகளை போல், கோமாளிகளையும் புதிதாக களமிறக்கி உள்ளனர். அந்த வகையில், புகழ், சுனிதா, குரேஷி, சரத் போன்ற பழைய கோமாளிகள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து காமெடி கலாட்டா செய்ய கேமி, அன்ஷிதா, வினோத், ஷப்னம், நாஞ்சில் விஜயன், ‘என்னம்மா’ ராமர் போன்ற புது கோமாளிகளை களமிறக்கி உள்ளனர். இதனால் இந்த சீசன் ஃபன் ஓவர்லோடடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

2026 திரைப்பட வெளியீட்டுத் தேதிகள்: புதிய பட்டியலை வெளியிட்டது ஸ்கிரீன் டெய்லி

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

65மிமீ சினிமா சென்சார் சிலிக்கான் வேஃபரை காட்சிப்படுத்தியது சோனி: 2027-இல் அறிமுகமாகிறது

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் அஞ்சலி

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல்!

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

99 வயதிலும் செம ஆக்டிவ்! பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடி பூஜா உமாசங்கர் வெளியிட்ட க்யூட் போட்டோ

 இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார்