Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இன்று முதல் ஆஸ்ட்ரோ விண்மீன்னில் ஒளிபரப்புக் காணும் 'வெட்டிங் கலாட்டா'
சினிமா

இன்று முதல் ஆஸ்ட்ரோ விண்மீன்னில் ஒளிபரப்புக் காணும் 'வெட்டிங் கலாட்டா'

Share:

கோலாலம்பூர், மே 20 -

மே 20 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் புதுமுக உள்ளூர் இயக்குநர் சரண் சட் இயக்கிய வெட்டிங் கலாட்டா எனும் உள்ளூர் தமிழ் காதல் நகைச்சுவைத் தொடரை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடர் ஒரே தேதி மற்றும் இடத்தில் தங்கள் சபதங்களைப் பரிமாறிக் கொள்வதோடுத் திருமணப் பந்தத்தில் இணையத் தயாராகும் மூன்று ஜோடிகளின் வாழ்க்கையைச் சித்தறிக்கிறது. கல்லூரி வாழ்க்கையிலிருந்துத் தொழிலில் காலடி எடுத்து வைத்து அதைத் தழுவ முயற்சிக்கும் வேளையில் ஹீராவின் குடும்பத்தின் அழுத்தத்தின் காரணமாக நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் திருமணத் திட்டங்களைத் தொடங்க அஸ்வினும் ஹீராவும் முடிவுச் செய்கிறார்கள்.

இதற்கிடையில், பலமுயற்சிகளுக்கு மத்தியில் இருவருக்கும் இடையில் காதலை உணராவிட்டாலும் ஜீவாவும் பிரியாவும் அதைப்பொருட்படுத்தாமல் நிச்சயிக்கப்பட்டத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்கள். மறுப்பக்கம், தனது முன்னாள் மனைவித் தன் வாழ்வில் முன்னேரியதை அறிந்தவுடன் விவாகரத்துப் பெற்றப் பிரகாஷ் மேக்னாவைத் திருமணம் செய்துக் கொள்ள முடிவுச் செய்கிறார்.

இந்த ஜோடிகள் திருமணம் செய்து அவர்களின் உண்மையானக் காதலைக் கண்டுபிடிப்பார்களா அல்லது விதிவேறுத் திட்டங்களை அவர்களுக்கு வைத்திருக்கிறதா என்பதே இச்சுவாரஸ்சியமானக் காதல் நகைச்சுவைத் தொடரின் கதைக் களம். அதனை அறிய, ஜேம்ஸ்தேவன், தாஷா, ஆல்வின் மார்ட்டின், விக்கி ராவ், பவித்ரா ரெட்டி, லிஷாலினி, கஜேந்திரன், தேவகன்னி மற்றும் பலர் உட்படப் புகழ்பெற்ற உள்ளூர்நடிகர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் அற்புதமானவெட்டிங் கலாட்டா தொடரைக் காணுங்கள்.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக்காணும் வெட்டிங் கலாட்டா தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Related News

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

தான் ஒரு தாய் என்பதை வெளிப்படுத்திய நடிகை பத்மபிரியா: நெகிழ்ச்சியான பதிவுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட்டம்

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

வாழ்த்துகள், எனது அன்பான கரப்பான் பூச்சிகளே: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் தனுஷின் குடும்பப் பின்னணி: கஸ்தூரி ராஜா, செல்வராகவன் முதல் ரஜினிகாந்த் தொடர்பு வரை

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

நடிகர் விஜய்யுடன் தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சுவாதி: 'எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய்' என்று நெகிழ்ச்சி

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

தேசிய விருதுகள் சர்ச்சை: 'ராயன்' படத்தை விடச் சிறந்த படங்கள் வெளிவந்தன - நடிகர் தனுஷ் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடிகை ஜோதிகா ஆதரவு