Oct 11, 2026
Thisaigal NewsYouTube

சிம்பு செப்டம்பர் மாதம் புதிய படத்தைத் தொடங்குகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிம்பு செப்டம்பர் மாதம் புதிய படத்தைத் தொடங்குகிறார்

சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

படப்பிடிப்புப் பணிகளை வரும் செப்டம்பர் மாதம் தொடக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. திரைப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படம் ஒரு கற்பனை கலந்த கலகலப்பான திரைப்படமாக உருவாக இருக்கிறது.

சிம்பு தற்பொழுது எஸ்டி ஆர் 49 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →