Oct 12, 2026
Thisaigal NewsYouTube

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் 2 - ம் பாகம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தொடர்ந்து செய்திகள் உலா வந்தது.

இந்நிலையில், அண்மையிக் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதிச் செய்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →