Jul 5, 2026
Thisaigal NewsYouTube
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரின் அடுத்தத் திட்டம்
சினிமா

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரின் அடுத்தத் திட்டம்

Share:

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களைக் காமெடி கலந்து சொல்லப்பட்டிருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக் குழுவினரைப் பாராட்டினர். மேலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது. முதல் படத்திலேயே பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாகவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலியின் இணை இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடித்து வெளியான 'மன்மதன்' படத்தில் உபயோகப்படுத்திய பிரபலமான ஆங்கில வார்த்தையில் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

அமெரிக்காவில் மீண்டும் எழுச்சி பெறும் சுயாதீனத் திரையரங்குகள்: பெருந்திரையரங்குகளுக்கு சவால் அளிக்கும் ஜென்-இசட் தலைமுறையினர்!

அமெரிக்காவில் மீண்டும் எழுச்சி பெறும் சுயாதீனத் திரையரங்குகள்: பெருந்திரையரங்குகளுக்கு சவால் அளிக்கும் ஜென்-இசட் தலைமுறையினர்!

2026 முதல் பாதி சினிமா: பிரம்மாண்ட பான்-இந்திய படங்களின் சரிவும் பெண் கதாபாத்திரங்களின் சர்ச்சைகளும்!

2026 முதல் பாதி சினிமா: பிரம்மாண்ட பான்-இந்திய படங்களின் சரிவும் பெண் கதாபாத்திரங்களின் சர்ச்சைகளும்!

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்