Oct 1, 2026
Thisaigal NewsYouTube

பராசக்தி வெளியாவதற்கான புது தேதியை அறிவித்த தயாரிப்பாளர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பராசக்தி வெளியாவதற்கான புது தேதியை அறிவித்த தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது மாற்றப்பட இருப்பதாக அண்மையில் தகவல் வந்தது. ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் சொல்லப்பட்டது.

சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் Dawn Pictures புது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஜனவரி 10ம் தேதி பராசக்தி ரிலீஸ் ஆக இருப்பதாக புது வீடியோவுடன் அறிவித்து இருக்கின்றனர்.

விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு மறுநாள் பராசக்தி திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.  

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →