Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் 2 பிரபலங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிம்பு - வெற்றிமாறன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் 2 பிரபலங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'வாடிவாசல்' திரைப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சிம்பு நடிக்கவிருக்கும் படத்தைத்தான் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் கவின் ஆகிய இருவரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்தப் படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, சமுத்திரக்கனி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

வடசென்னையை மையமாகக் கொண்ட கதையம்சத்தில் இந்தப் படம் உருவாகுவதாகவும், இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →