Oct 13, 2026
Thisaigal NewsYouTube

சூர்யாவின் கஜினி படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் மற்றொரு முன்னணி நடிகரா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சூர்யாவின் கஜினி படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் மற்றொரு முன்னணி நடிகரா?

நடிகர் சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் முக்கியப் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது கஜினி. முருகதாஸ் இயக்கிய இந்த படம் தமிழில் மிகப் பெரிய ஹிட் ஆக, அதன் பின் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய ஹிட் ஆனது.

கஜினியில் சூர்யாவின் நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது. ஆனால் அந்த கதை முதலில் அவரிடம் வந்தது அல்ல, பல நடிகர்கள் நிராகரித்த பிறகு தான் அந்த வாய்ப்பு சூர்யாவுக்குச் சென்றது. நடிகர் மாதவன் அண்மையில் அளித்த பேட்டியில் இந்த பட வாய்ப்பு தன்னிடம் தான் முதலில் வந்ததாகக் கூறியுள்ளார். பாதி கதை செல்லும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சூர்யா அந்த படத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் பாராட்டினார். சிக்ஸ் பேக் வேண்டும் என்பதற்காக சூர்யா ஒரு வாரம் உப்பு சாப்பிடாமல் இருந்தார் என அறிந்து வியந்ததாகவும் மாதவன் கூறியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →