Oct 10, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் அர்ஜூன் இயக்கத்தில் சீதா பயணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நடிகர் அர்ஜூன் இயக்கத்தில் சீதா பயணம்

பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

சீதா பயணம் படத்தில் பிரகாஷ் ராஜ் , சத்யராஜ், கோவை சரளா ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தில் கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ளார். இந்நிலையில் படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →