Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நடிகர் விமலுக்கு ஒரு வருட சிறை தண்டனை - ரூ. 4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் தீர்ப்பு
சினிமா

நடிகர் விமலுக்கு ஒரு வருட சிறை தண்டனை - ரூ. 4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் தீர்ப்பு

Share:

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் விமலை குற்றவாளியாக அறிவித்து ஒரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 'மன்னர் வகையறா' படப்பிடிப்பின் போது நிதி நிறுவனத்திடம் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கப்பட்ட ரூ. 4.5 கோடி காசோலை பணம் இல்லாமல் திரும்பியதை அடுத்து தொடரப்பட்ட வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேல்முறையீடு செய்வதற்காக நடிகர் விமலுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் இந்தச் சிறை தண்டனையை நீதிமன்றம் உடனடியாக நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News