Oct 10, 2026
Thisaigal NewsYouTube

'96' 2ஆம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
'96' 2ஆம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார்

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ‘96’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் ‘96’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை என்றும் அதனால் அவர் பிரதீப் ரங்கநாதனிடம் பேசியதாகவும் அவரும் மறுத்து விட்டதால் தற்போது வேறு நடிகரை அவர் தேடிக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் பிரேம்குமார் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தில் நடித்தவர்களை வைத்து தான் இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். '96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96-2 எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் '96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாளுக்கு நாள் பெருகி வரும் பொய்ச் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது என பிரேம்குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →