Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்
சினிமா

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்

Share:

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி வெளி வந்தது. அனிருத் இசையில் உருவான இந்தப் பாடல் பட்டித்தொட்டி எங்கும் வைரலானது.

தரமான பாடலை விஜய்யின் கடைசி படத்திற்காக அனிருத் கொடுத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் கூறினர். Youtube-ல் இதுவரை தளபதி கச்சேரி 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 4ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் எனக் கூறுகின்றனர்.

இரண்டாவது பாடலை நாளைய தீர்ப்பு படம் வெளிவந்த நாளில், அதாவது விஜய்யின் திரையுலக வாழ்க்கை தொடங்கிய நாளான டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், மோனிஷா, பிரியாமணி, கவுதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்